காதுவலி குணமாக - மணத்தக்காளி கீரையும், துளசியின் இலையையும் சமஅளவு எடுத்து இடித்துச் சாறு எடுத்து மூன்று துளிகள் காதில் விடலாம்.
காது அடைப்பு, கட்டி - தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டால் குணமாகும்.
காதில் ஈ புகுந்தால் வெளியேற – குப்பைமேனி சாரும், சிறுபிள்ளைகளின் சிறுநீரும் கலந்து சில சொட்டுகள் காதில் விட்டால் குணமாகும்.
காதுவலி – எலுமிச்சம்பழ சாறு 4 துளி காதில் விடலாம்.
சீழ் வருவது நிற்க - தைவேளை இலைச்சாறு 1 துளி விடலாம்.
காது மந்தம் – திருநீற்றுப் பச்சிலையை வாட்டிப் பிழிந்து சாறு இரண்டொரு துளி காதில் விட குணமாகும்.
காது குத்தல் நிற்க - பெருங்காயத்தை பொறித்து தேங்காய் எண்ணையில் சிறிது நேரம் ஊறவைத்து அதில் இருதுளிகள் காதில் விடலாம்.
காதடைப்பு தீர - சிருதேல் கொடுக்கு இலைச்சாறு நல்லெண்ணையில் சமஅளவு கலந்து காய்ச்சி காதில் 2 சொட்டு விட தீரும்.
காது செவிடு சரியாக – கொன்றைவேர்பட்டை, முருங்கை வேர்பட்டையும் அரைத்து துணியில் பிழிந்து சாறு 2 சொட்டு காதில் விட காது செவிடு சரியாகும்.
காதில் கிருமி ஒழிய - ஆமணக்கு பூ சாறு, வசம்பு, மணத்தக்காளி இலைச்சாறு, வெள்ளைப்பூண்டு ஏதாவது ஒரு சாறு காதில் விட கிருமி ஒழியும்.