தாது பலப்பட – 10 கிராம் வில்வ வேர்பட்டையை, 1 கிராம் சீரகத்துடன் அரைத்து பாலில் சாப்பிட்டு வரலாம்.
தாது இழப்பு தீர – சாதிக்காய் பொடி, பிரண்டை, உப்பு, நெய்யில் சேர்த்து சாப்பிடவும்.
தாது விருத்தியாக – முருங்கை இலை பொரியல் நெய்யுடன் 48 நாட்கள் சாப்பிடவும்.
புத்திக் கூர்மை, தாதுவிருத்தி, உடற்பொலிவு உண்டாக – கோரைக்கிழங்கு சூரணம் 1 கிராம் காலை, மாலை தேனில் சாப்பிடவும்.
தாது பெருக - வாழைப்பழத்தை பருப்புடன் சமைத்து சாப்பிடலாம்.
ஆண்மை பெருக - திப்பிலி பொடியை நெய்யுடன் சாப்பிடவும். மேலும் பேரீச்சம் பழத்தை ஆட்டுப்பாலில் ஊறவைத்து மறுநாள் காலையில் ஏலக்காய் சேர்த்து சாப்பிட ஆண்மை பெருகும்.
தாதுமிடுப்பு உண்டாக – வெடிக்காத தென்னம்பாளை பிஞ்சை பசும்பாலில் அரைத்து 2 கிராம் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட தாதுமிடுப்பு உண்டாகும்.
தாதுகட்ட – நெருஞ்சில் விதையை பாலில் அவித்து உலர்த்தி பொடி செய்து காலை, மாலை சாப்பிட்டு வர தாது கட்டும்.
தாதுபலம் உண்டாக – முருங்கைப் பிசினை பொடி செய்து அரை கரண்டி பாலில் காலை, மாலை சாப்பிட தாதுபலம் உண்டாகும்.
தடைபட்ட மாதவிடாய் குணமாக - வேலிபருத்தி வாதநாராயணன் பொடி சாப்பிட சரியாகும்.