வயிற்றுக்கோளாறுகள் – புதினா துவையல் வயிற்றுக்கோளாறுகளுக்கு நல்ல மருந்து.
சுத்தமான புனுகை பருவின் மீது தடவி வர பரு மறையும்.
சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக பனைவெல்லம் சேர்த்து சாப்பிட நன்கு பசி எடுக்கும்.
மலச்சிக்கல் குணமாக – சுரக்கொன்னை மர பூவை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு பால் சாப்பிட மலச்சிக்கல் வராது.
குடல் வலிமை பெற – வில்வமர பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வர நலமாகும். வலிமை பெரும்.
மாதுளம் பூவை கஷாயம் செய்து குடிக்க வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
சுரக்காய் வாரம் 2 தடவை சாப்பிட்டு வர மலத்துடன் இரத்தம் வருவது நிற்கும்.
குழந்தையின் வயிற்றின் மீது சூடுபடுத்திய வெற்றிலையை போட்டு வைத்தால் பொருமல் வலி குணமாகும்.
வயிற்று வலிக்கு - கசகசாவுடன் கருப்பட்டி மற்றும் 4 கிராம்பு பொடி செய்து மூன்று வேளை சாப்பிட குணம் கிடைக்கும்.
மாதுளம் பூ இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர மலத்துடன் இரத்தம் வருவது நிற்கும்.
வயிற்றுப் பூச்சி ஒழிய – பாகற்காய் விதையை அரைத்து பாலுடன் கலந்து அருந்தி வர வயிற்றுப் பூச்சி புழுக்கள் ஒழியும்.
பேதி குணமாக – மாங்கொட்டையை பருப்பு பொடி செய்து பசும்பாலுடன் கலந்து சாப்பிட பேதி நிற்கும்.
அஜீரணம் சரியாக - ஒரு டம்பளர் தண்ணீரில் கருவேப்பிலை. இஞ்சி, சீரகம் இம்மூன்றையும் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டி குடிக்க நிவர்த்தியாகும்.
வாயு தொல்லை நீங்க – வெள்ளைப்பூண்டு பசும்பாலில் வேகவைத்து சாப்பிட்டு வர விலகும்.
வாயு நீங்கி நல்ல பசி எடுக்க – விளாம்பழத்தின் கொழுந்து இலைகளை பறித்து கஷாயம் வைத்து சாப்பிட வாயு நீங்கி நல்ல பசி எடுக்கும்.
வயிற்று நோய் குணமாக – சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிட குணமாகும்.
குடல் புழுக்கள் - தும்மட்டி காய் சாற்றில் கருஞ்சீரகத்தை அரைத்து விலாவில் பூசினால் குடல் புழுக்கள் வெளியேறி விடும்.
வயிற்று வலி தீர – ஆமணக்கு துளிரை விளக்கெண்ணையில் வதக்கி தொப்புளில் வைத்து கட்ட சூடால் வரும் வயிற்று வலி தீரும்.
வயிற்று போக்கு தீர - நீர்முள்ளி விதையை பொடி செய்து 1 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டு வர மோகம், வயிற்றுப் போக்கு தீரும்.
வயிற்று பூச்சிகள் ஒழிய – வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் ஒரு கரண்டி தேன் கலந்து காலை, மாலை 2 வேளை சாப்பிட வயிற்றுப் பூச்சிகள் தொந்தரவு தீரும்.
குடல் புண் குணமாக – மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும்.
வயிற்றுவலி குணமாக – குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர தீரும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.
வயிற்று புண், வாயு, பசியின்மை, மாதருக்கு உதிரப்போக்கு சரியாக - நாய்வேளை இலையை சமைத்து உணவுடன் சாப்பிட்டு வர சரியாகும்.
வயிற்று வலி, வயிற்று பொருமல். அஜீரணம் குணமாக – ஏலக்காய் பொடி தேனில் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று பொருமல். அஜீரணம் குணமாகும்.
வயிற்றுப் புழுக்கள் வெளியேற – எருக்கம் இலைச்சாறு 3 துளியை 10 துளி தேனில் கலந்து கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியேறும். ( குழந்தைகள்ளுக்கு கூடாது ).
வயிறு பெருத்து உடல் சிறியதாக இருக்கும் குழந்தைகளுக்கு – கோரை கிழங்கை தோல் நீக்கி சூப் வைத்து கொடுக்க சரியாகும்.
வயிற்றுப் பூச்சிகள் வராமல் தடுக்க – அன்னாசிப்பழம் தினமும் சாப்பிட வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.
பேதி நிற்க – அவரை இலை சாரை தயிருடன் சாப்பிட பேதி நிற்கும்.
தொடர் வயிற்றுப் போக்கு உள்ளவர்கள் பப்பாளிப்பழம் சாப்பிட குணமாகும்.
வாழைப்பூவை வாரம் 1 நாள் கூட்டாக செய்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் ஆறும்.
உஷ்ணபேதி குணமாக – உலர்ந்த மாம்பூ, சீரகத்தை சேர்த்து தூள் செய்து சர்க்கரை சேர்த்து சாப்பிட குணமாகும்.
கழிச்சல் குணமாக – மாங்கொட்டை பருப்பு, மாதுளம்பூ, ஓமம் சேர்த்து பொடி செய்து மோரில் சாப்பிட கழிச்சல் குணமாகும்.
குடல் புழுக்கள் அழிய - மாதுளம்பழம் பழம் படுக்கைக்கு செல்லும் முன் சாப்பிட குடல் புழுக்கள் அழியும்.
வயிற்றுக் கடுப்பு நீங்க – அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து சாப்பிடலாம்.
குடல் புண் குணமாகவும், வயிற்றுப் புழுக்கள் அழியவும் - அகத்திக் கீரை நல்ல உணவு.
குடல் புண் தீர - முட்டைகோஸை நறுக்கி சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை பருகி வர குடல் புண் குணமாகும்.
பித்தத்தை குறைக்க – விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினம் ஒரு பழம் சாப்பிட்டு வர பித்தத்தை குறைக்கும்.
பேதி நீங்க - ஜாதிக்காயை தண்ணீர் விட்டு அரைத்து தொப்புளைச் சுற்றி பற்றுபோட பேதி நிற்கும்.
வயிற்று பூச்சி அழிய – பாகற்காய் கொடி இலையை சாறு பிழிந்து உட்கொள்ள வயிற்று பூச்சி அழியும்.
வயிற்று வலி தீர - இரவில் கண்விழித்து நெடுநேரம் வேலை செய்பவர்கள் காலையில் இளநீர் தொடர்ந்து சாப்பிட 8 நாட்களில் வயிற்று வலி தீரும்.
வயிற்றுக் கோளாறுகள் நீங்க – முள்ளங்கி கிழங்கு சமைத்து உண்டு வர வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.
மகோதரம் தீர – கரிசலாங்கண்ணி கீரையை சமைத்து உண்டு வர மகோதரம் தீரும்.
ஜீரண மண்டலம் சீர்பட - இரவு சாப்பாட்டை 7 மணிக்குள்ளாக முடித்துவிட்டால் ஜீரண மண்டலம் சீர்படும். பசியிருப்பின் பழச்சாறுகள் மட்டும் அருந்தலாம்.